மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து சக வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூறைநாடு பகுதியைச் சேர்ந்த சுந்தர், சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காலணி விற்பனைக் கடை நடத்தி வருகிறார்.
3 தினங்களுக்கு முன்பு இளையராஜா என்ற வழக்கறிஞர், சுந்தரின் கடையிலிருந்து வாங்கிச் சென்ற காலணி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை மாற்றித் தர வேண்டுமென இளைராஜா கேட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சுந்தர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சீர்காழியில் வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.