டுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், சேலத்தில் 41.7° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், தர்மபுரியில் 40.7° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், திருச்சியில் 40.2° செல்சியஸ், திருத்தணி மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
26.04.2024 முதல் 30.04.2024 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
26.04.2024 முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.