ஈரோட்டில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், டேட்டா எண்ட்ரி வேலைக்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளார். அப்போது சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்த பணம் முழுவதுமாக திருடப்பட்டது.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சேலத்தை சேர்ந்த நந்தகோபாலன், சாமிநாதன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.