கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பழங்குடியின மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமானோர், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இடுக்கி மாவட்டம், இடளக்குடி பகுதியில் பழங்குடியினமக்கள் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் செலுத்தினர்.
இதே போல் திருவனந்தபுரம், வயநாடு, கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை வாழ் மக்களும் ஆர்வத்துடம் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.