மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது.
2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த அறிக்கைகள் என்ற பெயரில் அமெரிக்கா ஒரு ஆவண அறிக்கையை வெளியிட்டது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
அமெரிக்காவின் அறிக்கைக்கு எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை என்றும், இந்தியா பற்றிய மோசமான புரிதல்களுடன் வெளிவந்துள்ள அமெரிக்காவின் இந்த அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
மேலும் கருத்து சுதந்திரம், பொறுப்பு உணர்வு மற்றும் பொது பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.