கோடை வெயிலின் தாக்கத்தினால் பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், வெப்பத்திலிருந்து தப்பிக்க தாங்களும் மதிய நேரத்தில் ஓய்வெடுப்பதாகவும் சென்னையிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆட்டோவை நாடுவது வழக்கம். ஆனால், தலைநகர் சென்னையில் வெயில் சுட்டெரிப்பதால், காலை மற்றும் மாலை வேளையில் மட்டுமே ஆட்டோ ஓட்டுவதாகவும், அனலில் இருந்து தப்பிக்க மதிய நேரத்தில் ஓய்வு எடுப்பதாகவும், ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வெயிலின் காரணமாக பொதுமக்கள் வெளியே பயணம் செய்வதைத் தவிர்ப்பதாகவும், இதனால் குறைந்த வருவாயே கிடைப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.