போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினரின் முயற்சி மட்டும் போதாது என ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலுள்ள உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர்,
போதைப்பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என இளைஞர்கள் உறுதியெற்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டால்தான், போதைப்பொருட்களை சமுதாயத்திலிருந்து நீக்க முடியும் என்றும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.