காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதம் தலைவிரித்தாடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி அவர்,
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நாள்தோறும் குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாகவும், தனது சொந்த குழந்தையை போல் 370-வது பிரிவை காங்கிரஸ் பாதுகாத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதையும் , 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையும் அவர் சுட்டிகாட்டினார்.
தற்போது தீவிரவாதம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் தனிநபர் சட்டங்களை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுவதாகவும், ஷரியாவின்படி நாட்டை ஆள முடியுமா என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.