தென்காசி அருகே காரில் 500 கிலோ குட்கா கடத்திய திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
சிவகிரி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு காரில் சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடித்தனர்.
போலீஸ் விசாரணையில், அந்த கார் திமுக மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, குட்கா கடத்தலில் ஈடுபட்ட போஸ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் லாசர் ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.