கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
விநாயக நந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் வற்றியதால், மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இந்தத் திருவிழாவில், பாசார், மங்களூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு மீன்களைப் பிடித்துச் சென்றனர்.