பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் சுற்றுலா வாகனம் நிறுத்துமிடம் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
ரோப்கார் நிலையம் எதிரே அமைந்துள்ள சுற்றுலா வாகனப் பேருந்து நிறுத்துமிடத்தில், டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இந்த குப்பை தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இவ்வாறு தீ விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க மாற்று இடத்தில் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.