வெயிலின் தாக்கத்தை சமாளிக்க புதுச்சேரியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி உள்ளிட்டவைகள் வழங்கப்படுவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள திருபுவனை பகுதியில், காவல் நிலைய வாயிலில் போலீஸார் நீர் மோர் பந்தல் அமைத்து தினமும் மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
பணி முடித்து அவ்வழியே செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனை வாங்கி உட்கொள்கின்றனர்.