புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் புலி வேடத்தில் சுற்றித் திரிந்த நாயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குறிஞ்சி நகர் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்க்கு மர்ம நபர்கள் சிலர் புலி வேடமிட்டு உலவ விட்டுள்ளனர்.
சட்டென்று இதனைப் பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள், உற்று நோக்கிய பின்னரே அது நாய் எனத் தெரிந்து நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில், புலி வேடத்தில் சுற்றித் திரியும் நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.