நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன், பாதுகாப்பு மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதில் சேலம், தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி,உள்ளிட்ட 7 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துதல், வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை பதிவேற்றம் செய்தல், வெப் கேஸ்டிங் ஒளிபரப்பு, வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் வாக்குச்சாவடிக்கு வரும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.