புதுச்சேரியில் ஒரு பிரியாணி வாங்கினால், ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பால் கடை முன்பு அலைமோதிய கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புஸ்ஸி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிரியாணி கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பிரியாணி வாங்க உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.