மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் அமரன் படக்குழுவினர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரரான முகுந்த வரதராஜனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் அமரன்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிஇந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதனிடையே மறைந்த முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் அமரன் திரைப்படக்குழுவினர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். மேலும் நமது தேசியக்கொடி காற்றில் பறப்பதில்லை, முகுந்த் வரதராஜன் போன்ற ராணுவ வீரர்களின் இறுதி மூச்சில் தான் பறக்கிறது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.