அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!
Oct 17, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட PDF மியான்மரில் தயாரிக்கப்பட்டதாகப் பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுவது நிரூபணமாகி உள்ளதாகவும் பாஜக  தெரிவித்துள்ளது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர்  சந்திப்பில் PDF ஒன்றை வெளியிட்டுப் பூஜ்ஜியம் எண் கொண்ட முகவரியில் எப்படி வாக்காளர்கள் இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம், வீடற்ற மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பின்பற்றப்படும் நடைமுறை இது என விளக்கம் அளித்தது. மேலும், ஆதாரங்களைச் சமர்ப்பித்து குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

இந்நிலையில், பீகாரில் வாக்கு திருட்டை முன்வைத்து வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தினார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் தனது குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியாயப்படுத்தினார். இதனால், காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

இதனிடையே பாஜகவின் செய்தித்தொடர்பாளரான பிரதீப் பந்தாரி, ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் ஆணைம் மீது புகார்  தெரிவித்து காங்கிரஸ் வெளியிட்ட PDF, மியான்மரில் தயாரிக்கப்பட்டது என அம்பலப்படுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு 100 சதவீதம் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் பிரதீப் பந்தாரி தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாஜகச் செய்தி  தொடர்பாளரான ஷெசாத் பூனவாலா, வெளிநாடுகள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதுமே ராகுல் காந்திக்குப் பற்று இருப்பதாகச் சாடியுள்ளார். பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்கள் வெள்ளித்தில் தத்தளித்தபோது ராகுல் காந்தி மலேசியாவிற்குச் சுற்றுலா சென்றதே இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரும் பலமாகக் கருதப்படும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தியை இயக்கும் அந்நிய சக்தி யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஷெசாத் பூனவாலா, வெளிநாட்டவர்களால் ஒரு பொம்மையைப் போல் இயக்கப்படுகிறீர்களா ராகுல் காந்தி? எனவும் காட்டமாக வினவியுள்ளார்.

இந்தியாவில் அந்நிய சக்திகளின் தலையீட்டை ராகுல் காந்தி விரும்புவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள ஷெசாத் பூனவாலா, பாஜக ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல் தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக  செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி SOROS உடன் தொடர்பில் இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

ஒருபுறம் வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரத்தை  சமர்ப்பிபேன் என ராகுல் மிரட்டல் விடுக்க, அதற்கு COUNTER கொடுக்கும் விதமாகப் பாஜக வெளியிட்டுள்ள ஆதாரம் அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

Tags: CongressRahul Gandhi under the control of foreign forces?: BJP releases evidence in vote rigging caseஅந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி?amethi rahul gandhi
Share
Tweet
SendShare
Previous Post

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

Next Post

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies