கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாலையோரத்தில் உள்ள பழச்சாறு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் நிலவுவதால், மார்த்தாண்டம், குலசேகரம், குளச்சல் உட்பட பல பகுதிகளில், பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது.
அதேபோல், சாலையோரங்களில் விற்கப்படும் தர்பூசணி, நுங்கு உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.