இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Aug 10, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியா எந்தெந்த நாடுகளுடன் அதிக வர்த்தக உறவு கொண்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தாததால் இந்தியாவுக்கு ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இது மிகவும் அதிகப்படியான வரியாகக் கருதப்படுகிறது. இந்த வரிவிதிப்பு இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தக கூட்டாளியே அமெரிக்காதான். அமெரிக்காவிடம் இருந்துதான் இந்தியா அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.

2023ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, அமெரிக்காவுடன் 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா வர்த்தகம் செய்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய், ரசாயனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா அதிகளவில் வாங்கியுள்ளது. அதே சமயம், நகைகள், ஜவுளி பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை இந்தியா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. 2023ம் ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சீன பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சீனாவிடம் இருந்தும் ரசாயனங்கள், மின்னணு பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, தாதுப் பொருட்கள், பருத்தி, கடல் பொருட்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வகிக்கிறது. இதற்கும் அடுத்த இடத்தில்தான் ரஷ்யா உள்ளது. அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் தவிர்த்து, வைரம், உரம், ராணுவத் தளவாடங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. பதிலுக்கு, தேயிலை, மசாலா பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த பட்டியலில் 5ஆவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது.

இப்படி, தன்னிடம் இருந்து அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்து, சுமுக வர்த்தக உறவு கொண்டுள்ள ஒரு நாட்டிற்குதான் அமெரிக்கா தற்போது 50 சதவீதம் வரி விதித்துள்ளது. அமெரிக்கப் பொருட்களை இந்தியா தவிர்க்கத் தொடங்கினால், அந்நாட்டின் வருவாய் கணிசமாகக் குறையும் சூழல் ஏற்படும். இது குறித்து எல்லாம் அறிந்துதான் டிரம்ப் இந்தியாவுக்கு அதிக வரி விதித்துள்ளாரா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags: Trumptoday news25% வரிWhich countries does India trade with the most?இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள்Indiausa50
Share
Tweet
SendShare
Previous Post

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

Next Post

வார விடுமுறை – உதகை, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies