தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 470 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி பைபாஸ் புறவழிச்சாலையில் குட்கா, பான்மசலா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 470 கிலோ பான் மசாலா குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரகுபதி, ரஞ்சித், பாண்டிமணி ஆகியோரை கைது செய்தனர்.