கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஆறுமுக நாவலர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன சந்தை பகுதியிலுள்ள மைதானத்தில், பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி தொடங்கப்பட்டது.
இந்த கோடைக்கால முகாமில், யோகா, சிலம்பம், இறகுப் பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.