புதிய ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்கத்தில் கூகுள் பின்னடவை சந்தித்ததை முதன்முறையாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், ஆபத்து நேர எச்சரிக்கையாக சிகப்பு குறியீட்டு அறிவிப்பினை கொடுத்தாகவும் கூறியுள்ளார்.
2022ம் ஆண்டு உலகில் மிக முக்கியமான ஆண்டு. OpenAI நிறுவனத்தின் AI Chatpot, மற்றும் ChatGPT அறிமுகமானது . இந்த செயற்கை நுண்ணறிவு அறிமுகம் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் கூகுள் நிறுவனமும் தப்பவில்லை. அதிவேகமாக வளரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கூகுள் நிறுவனமும் உள்ளது.
போட்டி நிறுவனங்களுக்கு சந்தையில் இடம் கொடுக்காமல் முன்னேறினால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்பது எதார்த்தம் என கூறும் சுந்தர் பிச்சை, இனி AI தான் உலகம் என்பது ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது தமது மனதில் பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதுவே கூகுளுக்கு CODE RED என்னும் அபாய எச்சரிக்கையைக் கொடுக்க வைத்தததாக சுந்தர் பிச்சை பகிரங்கமாக அறிவித்துள்ளார் .
கூகுளும் AI துறையில் மேம்பட்ட சேவையை வழங்க புதிய நடைமுறைகள், புதிய வழிமுறைகள் உருவாக்க முடிவு செய்ததாக கூறும் சுந்தர் பிச்சை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான முயற்சிகளை வெற்றிகரமாக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரை மீண்டும் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், AI விஷயத்தில் கூகுள் சவால்களை எதிர்கொண்டது.
AI பயணத்தில் இரண்டு குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை சந்தித்ததாக கூறும் சுந்தர் பிச்சை, ஒன்று சாட்போட் பார்ட், மற்றொன்று அதன் ஜெமினி AI.
இந்த இரண்டு பின்னடைவும் கூகுள் மீதான நம்பகத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியது.
இந்த சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் இப்போது முதல் முறையாக , ஜெமினி AI தப்பாகி விட்டது என்பதை சுந்தர் பிச்சை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்காக வருத்தம் தெரிவித்த சுந்தர் பிச்சை, AI வணிக களத்தில் கூகுள் பெரிய சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில், கூகுளின் AI திட்டம் – AI துறையில் கூகுள் அடைந்துள்ள முன்னேற்றம் வரும் டெவலப்பர் மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மாநாட்டில் கூகிள் தமது தயாரிப்புகள், அதன் பயன்பாடுகள் மற்றும் சேவைகளில் கூகுள் அறிமுகப்படுத்திருக்கும் புதிய AI அம்சங்கள் விளக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அதன் pixel சாதனங்களுக்கான AI மேம்பாடுகள் மற்றும் ஜெமினி AI Google Assistant இல் செய்திருக்கும் மாற்றங்கள் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கூகுளின் ஜெமினி AI இனி சாம்சங்கின் கேலக்ஸி AIக்கு சப்போர்ட் செய்யும். மேலும் இது iOS உள்ள ஆப்பிள் சாதனங்களுக்கும் பொருந்தும்.
அதுவும், iOS 18 இல் உருவாக்கப்படும் AI அம்சங்களுக்கான அடித்தளமாக அமையும் தகவல்கள் உலா வருகின்றன. இவை எல்லாம் வதந்தியா? உண்மையா? என்பது வரும் காலங்களில் தெரிந்து விடும்.