தேர்தலில் தோல்வி அடையும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்புவதை இண்டி கூட்டணி கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது, வாக்குச்சீட்டு முறை பயன்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் 2009 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது வாக்குச்சீட்டு முறை இருந்ததா என்றும் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.