கிருஷ்ணகிரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஓசூரில் உள்ள மத்திகிரியில் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் என்ற திருச்சபையை மே வால்ட் என்ற கிறிஸ்தவ போதகர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திருச்சபைக்கு வரும் 17 வயது சிறுமிக்கு மே வால்ட் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த மகளிர் காவல்துறையினர், பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.