குமரியில் அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் கிராம மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனவிளை கிராமத்திற்கு 5 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
தற்போது 3 அரசுப் பேருந்துகளின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த வழியாக வந்த இரண்டு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.