மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டர் ஏறிய பின் இருக்கையில் அமர முயன்ற போது தவறி விழுந்தார்.
இதனையடுத்து அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தாங்கிப்பிடித்து இருக்கையில் அமர வைத்தனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறிது ஓய்வுக்குபின் அசன்சோல் நகர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் புறப்பட்டுச்சென்றார்.