கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் சேவா பாரதி மாணவியர்களுக்கு தையல் மற்றும் கணினி பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
மார்தாண்டத்தில் உள்ள மண்டபத்தில், சேவாபாரதி தென்தமிழ்நாடு கன்னியாகுமரி மேற்குமாவட்ட பிரதிநிதிகள் சங்கமம் நடைபெற்றது.
அப்போது சேவா பாரதி சார்பாக இலவசமாக கணினி மற்றும் தையல் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சேவா பாரதி பொறுப்பாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.