திருவள்ளூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் காரணமாக, சோழவரம் நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பு சுமார் இரண்டரை அடி உயரமாக குறைந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் தேக்கங்களில் ஒன்றாக சோழவரம் நீர்த்தேக்கம் திகழ்கிறது.
இந்நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் காரணமாக சோழவரம் நீர்த்தேக்கத்தில் வெறும் 118 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டத்தின் உயரம் சுமார் இரண்டரை அடியாக குறைந்துள்ளது.
இதனால் சென்னையில் விரைவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.