நாமக்கல் அருகே பணி முடித்து விட்டு வீடு திரும்பிய டாஸ்மாக் ஊழியர்களை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள அண்ணா நகரைச்சேர்ந்தவர் வனரோஜா. இவர் சாலையூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகின்றார்.
வனரோஜா வழக்கம் போல் பணிமுடித்துவிட்டு, சக ஊழியர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அவர்களை வழிமறித்த மர்ம கும்பல், வனரோஜா உள்ளிட்டர்களை சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தது.
இதில், வனரோஜாவின் வலது கை துண்டானது. படுகாயம் அடைந்த வனரோஜா உள்ளிட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.