தமிழகத்தில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் மே ஒன்றாம் தேதி வரை, வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 42 டிகிரி செல்சியசும், திருப்பத்தூரில் 41 புள்ளி 6 டிகிரி செல்சியசும், சேலத்தில் 41 புள்ளி 5 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளாக கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 36 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது எனவும்,
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.