கர்நாடகா மாநிலம் சாம் ராஜ்நகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இண்டிகனட்டா கிராம வாக்குச்சாவடியில் ஏப்ரல் 29ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக 22 சாமராஜநகர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பொதுப் பார்வையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.