கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளன.
திக்கணம்கோட்டில் கடந்த 8-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கீழே தள்ளியுள்ளனர்.
பின்னர் கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு அக்கும்பல் தப்பியோடினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய நவீன், பிரவீன் உட்பட மூவரை கைது செய்தனர்.
இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை தாக்கி கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.