தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முக்கிய சாலையில் சென்ற கார் ஒன்று, மிட்டாய் கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கோவில்பட்டியில் முக்கிய சாலை ஒன்றில், ரமேஷ் என்ற இளைஞர் தனது தாயாருடன் காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
மேலும், சமுத்திர பாண்டி என்பவருக்கு சொந்தமான மிட்டாய் கடைக்குள் புகுந்தது. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கடும் போராட்டத்திற்கு பின்பு காரை மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த தாயும், மகனும் உயிர் தப்பினர். அதேபோல், மிட்டாய்கடை ஊழியர்களும் உயிர் தப்பிய நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்துறை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.