விழுப்புரம் அருகே மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்கள், மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்திலி கிராமத்தை சார்ந்த ஞானப்பிரகாசம் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் டேங்க் ஆபரேட்டர் சண்முகம் ஆகியோர் இடையே, குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் குறித்து முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில், இரண்டுபேரும், தங்களது ஆதரவாளர்களை அழைத்துவந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.