சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண் ஒருவரை, அவரது ஆண் நண்பர் ஹெல்மெட்டால் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஒரு பெண்ணும், அவரது ஆண் நண்பரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த பெண்ணை அந்த இளைஞர், ஹெல்மெட் மூலம் தாக்கியுள்ளார்.
இதில், பெண் மயக்கமடைய அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்த ஆண் நண்பர் மற்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வராததால் அந்த இளைஞரே இளம் பெண்ணை, தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அழைத்துச் சென்றார்.
இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.