நீதிபதி என கூறி பழனி கோவிலில் விரைவில் தரிசனம் செய்ய முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்வதற்காக தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர், தன்னை நீதிபதி என்று கூறிக்கொண்டு ரோப்காரில் முன்னதாக செல்ல அனுமதிக்குமாறு கேட்டு உள்ளார். கோவில் ஊழியர்கள் அவரிடம் அடையாள அட்டையைக் கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ரமேஷ் சொன்னது பொய் என தெரியவந்தது.இ,தனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.