நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உதகையில் கடந்த 16-ம் தேதி பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை சீரமைப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டது.
வனப்பகுதியின் நடுவே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, 6-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு குழிகள் தோண்டி, மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பைக்காரா படகு இல்லத்தை விரைந்து திறக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.