தேச நலனை விட்டு காங்கிரஸ் வெகுதூரம் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்டத் தேர்தல் மே 7 -ஆம் தேதி 14 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், பெலகாவில், பாஜக சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆண்ட போதும் இந்தியா வலிமை பெறவில்லை” என்றும், இதற்குக் காரணம், அவர்களுக்கு தேச நலனில் அக்கறை இல்லை” என்றும் தெரிவித்தார்.
அவர்கள் தேச நலனைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்கள்” என்று கூறிய பிரதமர் மோடி பாஜக அரசின் சாதனைகளுக்கு பொது மக்களிடம் நாளுக்கு நாள் பெரும் ஆதரவு கூடி வருவதாக தெரிவித்தார்.
இதுவே பாஜகவின் வெற்றிக்கு அடித்தளம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், “கர்நாடகாவில் சட்டம் – ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.