கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வரத்தால் கடற்கரை பகுதிகள் களைகட்டியது.
வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி கடலுக்கு அதிகாலையிலேயே வருகை புரிந்த மக்கள், சூரிய உதயத்தை கண்டு ரசித்து, குடும்பத்துடன் கடலில் விளையாடி மகிழ்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருங்காட்சியகம், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.