தேனி அருகே திருவிழா மற்றும் இறுதிச் சடங்கு உள்ளிட்டவைகளுக்கு செல்ல முடியாமல் பாலம் இன்றி அவதியடைந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, பெரியகுளம் அருகே உள்ள எ.புதூர், மறுகால்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
வாய்க்காலின் மறுகரையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் கடந்த 25 வருடமாக பாதை வசதி இல்லாமல் போராடி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.