டெல்லியில் வரும் 9 -ஆம் தேதி நடைபெறும் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கும் விழாவில் தானும் விஜய பிரபாகரனும் கலந்து கொள்ள உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடைக்கால சிறப்பு குளிர்பான தண்ணீர் பந்தலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தலில் ஜனநாயக கடமை ஆற்றுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை” என்றும், “ஒவ்வொரு நபர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் கூறினார். “சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது மிகவும் வருத்தமான சம்பவம்” எனவும் குறிப்பிட்டார்.