இடஒதுக்கீட்டை சங்பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது, இட ஒதுக்கீட்டிற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக தவறான வீடியோ ஒன்று உலா வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
சில பிரிவினருக்கு நீட்டிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை சங்க பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று சங்கம் கருதுவதாக அவர் தெரிவித்தார். பாகுபாடுகள் அகற்றப்படாத வரை ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும் மோகன் பகவத் கூறினார்.
அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்காக சங்கம் ஆரம்பத்திலிருந்தே ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.