நெல்லையில் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் சாலையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அருவி அமைந்துள்ள வனப்பகுதிக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. எனவே பாதுகாப்பு கருதி சாலையை சீரமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.