கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக தமிழகப் பதிவெண் கொண்ட வாகனத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் தங்களது காரில் கேரளா சென்றபோது, தமிழக – கேரள எல்லையில் கேரள மாநில மோட்டார் வாகன கண்காணிப்புத் துறை போலீசார் அவர்களது காரை நிறுத்தியுள்ளனர்.
அவர்களது கார் சக்கரம், அலாய் சக்கரமாக இருப்பதாகக் கூறி, ஒவ்வொரு சக்கரத்துக்கும் ஐந்தாயிரம் ரூபாய் என நான்கு டயர்களுக்கும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக வாகனத்தைக் குறிவைத்து வேண்டுமென்றே அபராதம் விதிப்பதாக, தமிழக இளைஞர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.