திருப்பத்தூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடியில் வசித்து வரும் விக்னேஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று குடும்பத்துடன் வெளியே சென்ற நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை, 46 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.