கோவையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் உள்ள சேரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் உடுமலை சாலையில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவருடைய வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.