ராமநாதபுரத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டி கூட்டாம் புலி கிராமத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தீவிர கண்காணிப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.