நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்.
அக்கரைப்பேட்டை பகுதியில் கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தொடங்கி வைத்த இப்போட்டியில், சேலம், அரியலூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 30 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெண்ணங்குழி கபாடி அணியினர் 33 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தனர்.