புதுச்சேரி தூத்திப்பட்டு கிராமப்பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட தூத்திப்பட்டு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலால் தூத்திப்பட்டு- சேதராப்பட்டு சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது