தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரானூர் பார்டர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.
இதேபோன்று செங்கோட்டை நகரில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.